இந்திப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைப் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 25, 2021, 22:50 [IST] லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாநகரம் படத்தின் இந்தி ரீமேக், மும்பைகர் என்ற பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிறது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே, சஞ்சய் மிஷ்ரா, தன்யா மானிக்தலா, சச்சின் கடேகர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை அடுத்து, அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் அடுத்த இந்தி படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்லார். இப்படத்தின் கதாநாயகியாக கத்ரினா கைப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படம் 90 நிமிட படமாக உருவாக உள்ளது. 30 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்சமயம் விஜய் சேதுபதி லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் நடத்து வருகிறார். 19(1)(a) என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|