ஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 26, 2021, 20:05 [IST] சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஓடிடியில் வெளியான படம் சூரரைப் போற்று. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையை இப்படம் படைத்தது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் சூரரைப் போற்று திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
|
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) தோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972) மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990) மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978) செல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020) வாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020) ரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020) மீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980) |
|
|
|