பிரபல வசனகர்த்தா, நடிகர், இயக்குனர் ஈரோடு சவுந்தர் காலமானார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 6, 2020, 10:25 [IST]

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தா, நடிகர், இயக்குனர் ஈரோடு சவுந்தர் உடல்நலக்குறைவால் காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ஈரோடு செளந்தர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63.

சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்ட படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். சேரன் பாண்டியன், நாட்டாமை கதைகளுக்காகவும் சிம்மராசி பட வசனத்துக்காகவும் தமிழக அரசு விருது பெற்றுள்ளார். மேலும் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

கடந்த வருடம்தான் தனது பேரன் கமலேஷை வைத்து ‘அய்யா உள்ளேன் அய்யா’ படத்தை இயக்கியிருந்தார். இதில், அவரது இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரும் நடித்து நட்புக்கு மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய கமல்ஹாசனின் தசாவதாரம், ரஜினியின் லிங்கா படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

63 வயதாகும் ஈரோடு சவுந்தருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்ரி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஈரோடு சவுந்தரின் இறுதி சடங்கு இன்று நடைபெற இருக்கிறது.
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021