நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 5, 2020, 10:25 [IST]

சென்னை: பிரபல தமிழ் நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்.

பிரபல நடிகை ஜெயசித்ரா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். 70 மற்றும் 80- களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் அறிமுகமான இவருக்கு, கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படம் சிறந்த அடையாளமாக அமைந்தது. பிறகு கமல்ஹாசனின் சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, பட்டாம்பூச்சி, தேன் சிந்துதே வானம், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர், கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய மகன் அம்ரிஷ், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக உள்ளார். 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'சார்லி சாப்ளின் 2' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

கணேஷ், திருச்சியில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவர் உடல் திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. போயஸ் கார்டனில் உள்ள அவர் வீட்டில், அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

ஜெயசித்ராவின் கணவர் மறைவுக்கு மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021