திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 24, 2020, 07:15 [IST] 2020-22ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி தேர்தல் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முதலில் எண்ணப்பட்ட தலைவருக்கான வாக்குகளில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டி.ராஜேந்தர் 388 வாக்குகள், பி.எல்.தேனப்பன் 88 வாக்குகள் பெற்றனர். 17 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் தேர்தலில் முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 475 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் 425 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின், செயலாளர் பதவிக்கு அதே அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும், டி.ராஜேந்தர் அணியைச் சேர்ந்த மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.
|
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) தோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972) மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990) மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978) செல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020) வாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020) ரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020) மீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980) |
|
|
|