சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 14, 2020, 09:20 [IST] மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்பு நடித்து வந்தார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.32 மணியளவில் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘ஈஸ்வரன்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. பொங்கல் வெளியீடு என்று ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அறிவித்துவிட்டதால், இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக களமிறங்கவுள்ளது படக்குழு.
|
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) தோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972) மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990) மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978) செல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020) வாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020) ரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020) மீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980) |
|
|
|