நடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 5, 2020, 08:55 [IST] தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தமன்னா. அத்துடன் இவர் அவ்வப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. உடனே பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|