எஸ்.பி.பி உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 26, 2020, 09:20 [IST]

சென்னை: நேற்று காலமான எஸ்.பாலசுப்பிரமணியத்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.யின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. கொரோனா குணமடைந்தாலும், அவரது உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் காலமானார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

முதன் முதலாக 1966-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கில் ‘மரியாத ராமண்ணா’ படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார். தமிழில் அவர் பாடிய முதல் படம் ‘ஹோட்டல் ரம்பா’. அந்த படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு சேர்ந்து, “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு” என்ற பாடலை பாடினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த படம் வெளியாகவில்லை. அடுத்து ‘சாந்தி நிலையம்’ படத்தில் பி.சுசீலாவுடன் சேர்ந்து ‘இயற்கையெனும் இளைய கன்னி’ என்ற பாடலை பாடினார்.

ஆனால் அதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில் சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளியாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஒரே நாளில் பெங்களூருவில் 21 கன்னட பாடல்களை பாடி இருக்கிறார். இதேபோல் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களும், 16 இந்தி பாடல்களும் பாடி சாதனை படைத்து உள்ளார்.

உலகில் எவரும் செய்யாத சாதனையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

‘சங்கராபரணம்’ படத்தில் அவருக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. சாகர சங்கமம், சுவாதி முத்யம், ருத்ரவீணா படங்களுக்காகவும் தேசிய விருது பெற்று உள்ளார். 6 முறை தேசிய விருது பெற்று இருக்கிறார். மின்சார கனவு படத்தில் பாடிய ‘தங்கத்தாமரை மகளே’ பாடலுக்காக ஆறாவது முறையாக தேசிய விருதை பெற்றார். 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது பெற்று உள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்தது. மத்திய அரசு இவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருதும், 2011-ம் ஆண்டில் ‘பத்மபூஷண்’ விருதும் வழங்கி கவுரவித்தது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சேவையை பாராட்டி கேரள அரசு 2015-ம் ஆண்டு அவருக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்தது. கவுரவ டாக்டர் பட்டமும் பெற்று உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி பெயர் சாவித்ரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி.பி. சரண் என்ற மகனும் உள்ளனர். சரண் பின்னணி பாடகராகவும் நடிகராகவும் இருக்கிறார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 2 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகள். சகோதரிகளில் ஒருவரான எஸ்.பி.சைலஜா பின்னணி பாடகி ஆவார்.
புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021