நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 10, 2020, 14:35 [IST]

நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடியில் கலக்கியவர் நடிகர் வடிவேல் பாலாஜி.

இவர் 18 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். பின்னர் நேற்று மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கொரோனா நோயாளிகள் அதிகம் இருந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வடிவேல் பாலாஜி, அங்கு நேற்றும் இன்றும் சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வடிவேல் பாலாஜி 1975ஆம் ஆண்டு பிறந்தவர். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். எனினும் விஜய் தொலைக்காட்சியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் மூலமே இவர் பிரபலமானார்.

வடிவேல் பாலாஜி ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020