நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 1, 2020, 17:50 [IST] கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ சமந்தாவின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வித்யுலேகா. இதையடுத்து தீயா வேலசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வித்யுலேகா, “கடந்த 26-ம் தேதி எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்துதான் இந்நிகழ்வில் கலந்து கொண்டோம். புகைப்படம் எடுப்பதற்காக அதை நீக்கியிருக்கிறோம். உங்களது அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் வித்யுலேகா சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|