டாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்ட் 24, 2020, 07:30 [IST] பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். தீபக் சுந்தர்ராஜன், நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். டாப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காகப் படக்குழுவினர் அனைவரையும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து அழைத்துச் சென்றுள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் காரணமாக ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் 'ஜன கண மன' படத்தில் டாப்ஸி ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|