ஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 26, 2020, 10:50 [IST] கொரோனா பரவலால் தியேட்டர்களை மூடி 100 நாட்களை தாண்டுகிறது. இதனால் ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்து இருந்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் சிரமப்பட்டனர். கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் புதிய படங்களை தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் நேரடியாக வெளியிட தொடங்கி உள்ளனர். ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். வரலட்சுமி நடித்துள்ள டேனி, யோகிபாபு நடித்துள்ள காக்டெயில், அருண் விஜய்யின் ‘வா டீல்,’ ‘மம்மி சேவ்’, ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களும் இணைய தளத்தில் வர உள்ளன. இந்த நிலையில் ‘லாக்கப்’ படமும் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். ஜருகண்டி படத்தை தொடர்ந்து நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் இரண்டாவது படம் ‘லாக்கப்’. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ளார். அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இதில் வெங்கட்பிரபு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகவும், வைபவ் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கிறார்கள். இருவரும் பணியாற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள லாக்அப்பில் நடக்கும் ஒரு சம்பவம் இருவரையும் பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறது. எதிரெதிர் துருவங்களாக உள்ள இருவரும் அந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. ZEE5 பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|