அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 24, 2020, 21:30 [IST]

சென்னை: அஜித்தின் வலிமை படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாகுமா என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தியேட்டர்கள் திறப்பு என்பது எப்போது என்று தெரியாத நிலையில், தொடர்ந்து ஆன்லைனில், நாடு முழுவதும் பல பெரிய படங்கள் ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றன.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்களை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் டேனி நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறது.

இருப்பினும் இந்த கொரோனா பரவல் குறைந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் என நடிகர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நம்பிக்கையுடன் முழுவதும் ரெடியான நிலையிலும், தங்கள் படங்களை ஆன்லைனில் வெளியிடாமல் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங்கும் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிற்கின்றது. வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டு இருந்த பைக் ரேஸ் காட்சிகளையும் எப்படி எடுக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் படக்குழு உள்ளது.

இந்நிலையில், தல அஜித்தின் வலிமை திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகுமா இல்லை தியேட்டர் ரிலீஸா என்ற கேள்விக்கு, தயாரிப்பாளர் போனி கபூர், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக, நிச்சயம் வலிமை திரைப்படம் முதலில் தியேட்டரில் தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் லாக்டவுனுக்கு பிறகு, மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

இதனால் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இதே நிலை தொடர்ந்தால் 2021 தீபாவளிக்கு தான் படம் வெளிவரும் போல தெரிகிறது என கவலையில் இருக்கின்றன.

பிற செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு : முழு விவரம்
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது
நடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி
பிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்
எஸ்.பி.பி உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்
நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது
டாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி
ஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020