தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 14, 2020, 19:20 [IST]

மும்பை: கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34.

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தில் தோனியாக நடித்து புகழ்பெற்றவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான, ‘காய் போ சே’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்தே சுஷாந்த்சிங் சற்று அதிருப்தியிலும், தீவிர மன அழுத்தத்திலும் இருந்து வந்தார்.

பிற செய்திகள்
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்
நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது
டாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி
ஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்
தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது
முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்!
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று







1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020