நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 14, 2020, 09:30 [IST]

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் இருந்ததை அடுத்து காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் ஊரடங்கு போட்டதில் இருந்தே சென்னையில் டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் கொரோனா தாக்குதல் அதிகமாக இருப்பதால் டாஸ்மாக் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

சென்னையில் மது விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை சிலர் கடத்தி வருகின்றனர். அவர்களை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் கானத்துார் காவல்துறையினர் முட்டுக்காடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மகாபலிபுரத்தில் இருந்து ஒரு இன்னோவா கார் ஒன்று வந்தது. TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்ட அந்த காரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தனர். அப்போதுதான் அந்த கார் நடிகை ரம்யா கிருஷ்ணனுடையது என்பது தெரியவந்தது.

காருக்குள் டிரைவர் செல்வகுமாரும், ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் இருந்தனர். காவல்துறையினர் அவர்களின் கார் டிக்கியைத் திறந்து சோதனை நடத்தினர். அப்போது டிக்கியில், 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் செல்வகுமாரை கைது செய்தனர். பிறகு கானத்தூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அடுத்த சில மணி நேரத்தில் டிரைவரை ஜாமீனில் விடுவித்தனர்.
புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021