முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 12, 2020, 11:35 [IST] ஊட்டியை சேர்ந்த வாணிபோஜன் ‘தெய்வ மகள்’ என்ற ‘சின்னத்திரை’ தொடரில் கதாநாயகியாக நடித்தவர். அந்த தொடரில் அவர், ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த ஒரு தொடரிலேயே பிரபலமாகி விட்டார். அதுவே அவருக்கு ‘பெரிய திரை’யில் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கி கொடுத்தது. அண்மையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை ஒரு தெலுங்கு டைரக்டர் இயக்குகிறார். நிதின் சத்யா தயாரிப்பில், வைபவ் கதாநாயகனாகவும், வெங்கட்பிரபு வில்லனாகவும் நடிக்கும் ‘லாக்கப்’ என்ற படத்திலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விதார்த் தயாரித்து நடிக்கும் படம், கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஆகிய படங்களிலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|