சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 6, 2020, 08:25 [IST] 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் முடிந்து விட்டது. ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற பழமொழியை ஊர்க்குருவியாலும் பருந்தாக முடியும் என நிகழ்த்திக் காட்டுவதே சூரரைப் போற்று படத்தின் கதை. ஒரு சாதாரண மாறா எப்படி விமான கம்பெனி நிறுவனத்துக்கு ஓனராக மாறுகிறார் என்பதை திரைப்படமாக உருவாக்கி உள்ளார் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. அதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமானநிலையத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் சூர்யா, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் உள்படப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், விமானத்தில் பயணிக்காத 70 மாணவர்கள் உள்பட 100 பேரை தன் சொந்த செலவில் பறக்க வைத்து நடுவானில் "வெய்யோன் சில்லி" பாடல் வீடியோவையும் ரிலீஸ் செய்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வந்தன. முன்னதாக இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திரைத்துறை முற்றிலுமாக முடங்கியது. திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. எப்போது மீண்டும் பணிகள் தொடங்கும் என்ற உத்தரவாதம் இல்லாமல் நிலைமை நீடிக்கிறது. இதனிடையே சூரரைப் போற்று படத்தைப் படக்குழு வரும் சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஒருவேளை நிலைமை சீராகவில்லை என்றால் மீண்டும் வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. ஆனால் படத்தின் அனைத்து வேலைகளும் இப்போது முடிந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் தணிக்கை முடிந்து சூரரைப் போற்று படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|