ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 26, 2020, 20:40 [IST] தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி இவர் தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி வருகிறார். சென்னை அசோக் நகரில் இயங்கிவரும் ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ட்ரெஸ்ட்டில் தங்கியிருக்கும் 10 மாணவிகள், 5 மாணவர்கள், மூன்று பணியாளர்கள், 2 சமையல்காரர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் பணியாற்றும் சமையல் செய்யும் பணியாளர் மூலமாக இது பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|