மும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 29, 2020, 15:50 [IST] இர்ஃபான் கான் 'நியுரோ எண்டோ க்ரைன்' புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது ரத்தத்திற்குள் ஹார்மோன்களை விடுவிக்கும் செல்களை பாதிக்கும். இக்கட்டிகள் ரத்தத்திற்குள் அதிக அளவிலான ஹார்மோன்களை விடுவிக்க செய்கிறது இதனால், இதய நோய், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. இதற்கு அறுவை சிகிச்சை அல்லது கிமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கலாம். இர்பான்கான் 2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கா ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 1966ம் ஆண்டு ஜன., 7ம் தேதி பிறந்தார். இளமை காலத்தில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்த இர்பான், நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் படித்தார். பின்பு மும்பைக்கு சென்று டிவி தொடர்களில் நடித்து வந்தார். அங்கு அவர் நடித்த பல தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 1988ம் ஆண்டு சலாம் பாம்பே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் பல படங்களில் நடித்தார். தனது இயல்பான நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்ட இர்ஃபான் கான் பாலிவுட் படங்களான பிக்கு, லன்ச் பாக்ஸ், கரிப் கரிப் சிங்கிள், மக்பூல் உட்பட 100 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். 2013ஆம் ஆண்டு பான் சிங் தோமர் என்ற படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார். பாலிவுட் மட்டுமின்றி, 'Life of Pi', 'Jurassic World', 'Slumdog Millionaire' போன்ற ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடித்துப் பலரது கவனத்தை ஈர்த்தவர் அவர். இர்ஃபான் கானின் Hindi Medium, The Lunch Box, D-Day போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை. இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு சுதபா தேவேந்திர சிக்தர் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இர்ஃபான் கானின் மறைவால் திரைப்படத் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. பல நடிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக ஊடகங்களின் வழி பதிவு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாபச்சன், நடிகர் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் முகமது கெயிஃப், கிரிக்கெட் வீரர் ஹேமாங் பதானி, நடிகை பிரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார், கியாரா அத்வானி, அஜய் தேவ்கன், ஷபனா ஆஸ்மி, ஆர்.மாதவன், சோனம் கபூர், ஷூஜித் சிர்கார், மினி மாத்தூர், நீலேஷ் மிஸ்ரா,பூமி பெட்னேகர், பரினிதி சோப்ரா, சஞ்சய் சூரி உள்ளிட்ட பிரபங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பான் கானின் அம்மா, சயீதா பேகம் கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். ராஜஸ்தானில் வசித்து வந்த அவர், 4 நாட்களுக்கு முன்னால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. லண்டனில் சிக்கிக் கொண்ட நடிகர் இர்பான் கான், இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அம்மாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|