மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2020, 21:35 [IST] இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன. தமிழ் நடிகர்களில் முதன்முதலாக ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்தார். அதில் பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி , பெஃப்சி தொழிலாளர்கள் என ரூ.3 கோடியை பிரித்து வழங்கினார். மேலும் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள 50 அம்மா உணவகங்களில் 3-ந்தேதி வரை மக்களுக்கு இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கினார். தற்போது மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதல் கட்டமாக ரூ.12½ லட்சம் நிதி வழங்கி இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|