அட்லீ தயாரிக்கும் ‘அந்தகாரம்’ பட டிரெய்லர் வெளியானது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 15, 2020, 10:45 [IST]

சென்னை: அட்லீ தயாரிக்கும் ‘அந்தகாரம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அட்லீ, தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கான டைட்டிலை நேற்று ரிலீஸ் செய்தார்.

“அந்தகாரம்” பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை விக்னராஜன் இயக்க, எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். அட்லீயுடன் சேர்ந்து Passion studios இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இளம் நடிகர்களை வைத்து அட்லீ களம் இறங்கும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டு ரசித்துள்ளனர். கிரைம் திரில்லர் வகையைச் சார்ந்த இப்படம் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஏற்கெனவே அட்லி 2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்
நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது
டாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி
ஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்
தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது
முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்!
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று







1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020