தொழில் அதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 07, 2020, 09:15 [IST] விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினிக்கு சகோதரியாக ”அண்ணாத்த” படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் ரங் தே, மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேசுக்கு தொழில் அதிபருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது என்றும், அவர் கேரளாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் மகன் என்றும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- “நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல. இது எப்படி பரவியது என்று ஆச்சரியமாக உள்ளது. திருமணம் பற்றிய எண்ணம் எதுவும் இப்போது இல்லை.” என்றார். மேலும் அவர், “எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அபத்தமான வதந்திகளைப் பரப்புவதை விட்டுவிடுங்கள். நாட்டில் இப்போது மிக முக்கியமான வேறு பிரச்னைகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைக் காட்டிலும் கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்த வேண்டும். நான் மக்களுக்குச் சொல்ல விரும்புவது பாதுகாப்பாக இருங்கள்” எனக் கூறியுள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|