பெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 06, 2020, 10:05 [IST] கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று பலரும் நிதி அளித்து வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதயநிதி, தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை குஷ்பு, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் நிதி வழங்கினர். இதுவரை மொத்தம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம் வசூலாகி உள்ளது. பலர் அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளனர். தற்போது நடிகை நயன்தாரா பெப்சி சினிமா தொழிலாளர்கள் அமைப்பிற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா நடிப்பில், கடந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில், மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|