‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 09, 2020, 09:25 [IST] கன்னடத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான கேஜிஎஃப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. ‘ராக்கி பாய்’ என்ற கதாப்பாத்திரம் இந்தியா முழுவதும் பிரபலமானது. இந்நிலையில் முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2 ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. 'கே.ஜி.எப் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது படக்குழு. 'ஒரு சாம்ராஜ்ஜியத்தை மறுகட்டமைக்கும்போது' என்ற வாசகத்துடன் வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்த மாதம் கேஜிஎஃப் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகும், ஆனால் அது டீசர் குறித்து இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|