தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 01, 2020, 06:45 [IST]

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் மாஸ்டர் பட நடிகை கெளரி கிஷன் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்திருந்த கௌரி கிஷன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது ஜானுவாக அறிமுகமானவர் கெளரி கிஷன்.

கேரளாவில் பிறந்து சென்னையில் பள்ளி படிப்பை முடித்து, பெங்களூருவில் பட்டப்படிப்பை முடித்த கெளரி கிஷனுக்கு 24 வயதாகிறது.

தெலுங்கில் வரும் பிப்ரவரி 7ம் தேதி ரிலீசாகவுள்ள ஜானு படத்திலும் ஜூனியர் ஜானுவாக நடித்துள்ளார்.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018


| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |