கோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 24, 2020, 07:40 [IST] கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடத்திவரும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கௌசல்யா என்ற மாற்றுத்திறனாளி பெண், ரூபாய் ஒரு கோடி பரிசு வென்றார். வாய் பேச முடியாத இவர் சைகைகள் மூலமே கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி இந்த பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு கோடி பரிசு வென்ற கௌசல்யா கமலஹாசன் அவர்களை சந்திக்க வேண்டுமென ராதிகாவிடம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து ராதிகாவின் ஏற்பாட்டின் பேரில் கௌசல்யா நேற்று கமல்ஹாசனை தனது குடும்பத்துடன் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கவுசல்யா கார்த்திகாவை, அவரது வரலாற்று வெற்றிக்காக முதல்வர் மனமுவந்து பாராட்டினார். முதல்வருடனான சந்திப்பில் கவுசல்யா கார்த்திகாவின் பெற்றோர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா சரத்குமார், நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் அனுப் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வெற்றி குறித்து கவுசல்யா கார்த்திகா கூறும்போது, எனக்கு இந்தநாள் மிக சிறப்பான நாளாகும். நம்பமுடியாததாகவும் இருக்கிறது. இதன்காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எனது மிகவும் பிடித்த நடிகர் கமலஹாசன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருடன் பேசமுடியவில்லையே என்று திகைத்து போனேன். அவர் மிக பொறுமையாகவும் நேர்த்தியாகவும் என்னுடன் பேசினார் என்று கூறியுள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|