சூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 02, 2020, 07:10 [IST]

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது.

காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இறுதிச்சுற்று படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படம் சூரரைப் போற்று.

இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கின்றன.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

சூரரைப் போற்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் சூர்யா இரு கைகளை விரித்துக் கொண்டு வானை நோக்கி பறப்பது போல் இருந்தார்.

இப்போது இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூர்யாவும் சிட்டுக்குருவி ஒன்றும் இருக்கிறது. சூர்யா சிட்டுக் குருவி போல பறப்பதற்கு ஆசைப்படுவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரை பலரும் வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசர் ஜனவர் 7ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020