தர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 01, 2020, 13:00 [IST] இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இது ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாகும். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் உலகம் முழுவதும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் தர்பார் சிறப்பு காட்சியை ஒரு நாள் முன்னதாக 8-ந்தேதி திரையிட உள்ளனர். தற்போது தர்பார் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|