விக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா?

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 25, 2019, 11:00 [IST]

சென்னை: விக்ரம் புதிய படத்தின் பெயர் ‘கோப்ரா’ என்று வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2 படங்களும் கடந்த ஜூலை மாதம் கடாரம் கொண்டான் படமும் திரைக்கு வந்தன.

தற்போது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கி பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இது அவருக்கு 58-வது படம்.

இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது.

இப்படத்துக்கு அமர் என்ற பெயரை வைத்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.

இந்த நிலையில் படத்துக்கு கோப்ரா என்ற பெயரை தேர்வு செய்து இருப்பதாக மீண்டும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பெயரை புத்தாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020