ரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 24, 2019, 17:00 [IST] ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் குஷ்பு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் தங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பி.வி.சிந்து ரஜினியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|