சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 15, 2019, 19:10 [IST] தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எனை நோக்கிப் பாயும் தோட்டா. பல வருடங்களுக்குப் பின்னர் வந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அதற்குமுன் வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வசூலைக் கொடுத்ததோடு, நல்ல வரவேற்பையும் பெற்றது. அசுரன் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக டுவிட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குநர், பிற நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|