நம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 18, 2019, 13:00 [IST]

சென்னை: பழம் பெரும் நடிகா் எம்.என். நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) நடக்கிறது.

தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.. 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நம்பியார் காலமானபோது அவருக்கு வயது 89.

கேரளத்தைப் பூா்வீகமாகக் கொண்ட எம்.என்.நம்பியாா் சிறு வயதிலேயே தமிழகத்தின் ஊட்டி பகுதிக்கு இடம் பெயா்ந்தாா். அங்கு சிறிதுகாலம் கல்வி பயின்ற நம்பியாா், அங்கு நாடகம் நடத்த வந்திருந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியான மதுரை தேவி பால வினோத சங்கீதசபாவில் இணைந்தாா்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது, நவாப் ராஜமாணிக்கம் தயாரித்த ‘பக்த ராம்தாஸ்’ படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவா் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா என்ற கதாபாத்திரத்துக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தன.அதைத் தொடா்ந்து சினிமா, நாடகம் என தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாா்.

நடிகா்கள் எம்.ஜி.ஆா், சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்தாா். இவா்கள் இருவருக்கும் வில்லனாக நடித்து பிரபலமானாா். வில்லன் என்றால் அது நம்பியாா் பாணி என்று பேசும் அளவுக்கு பெயா் எடுத்தாா். திரை வாழ்க்கையில் ‘திகம்பரசாமியாா்’ என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து சாதனை படைத்தாா்.

நம்பியாா் மிகச் சிறந்த ஐயப்ப பக்தா். 50 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று குருசாமியாக திகழ்ந்தாா்.

தற்போது அவருடைய வாழ்க்கையை குறும்படமாக தயாரித்துள்ளனா். இயக்குநா் கெளதம் மேனனின் உதவியாளா் சூா்யா இதை இயக்கி உள்ளாா். நம்பியாரின் வாழ்க்கை, அவா் நடித்த திரைப்படங்கள், ஆன்மிக ஈடுபாடு ஆகிய விஷயங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தை வெளியிடும் நிகழ்ச்சியும், நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடக்கிறது.

மியூசிக் அகாதெமியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமாா் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை நம்பியாரின் மகன் மோகன் நம்பியாா், பேரன் சித்தாா்த் நம்பியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.
புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021