யோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 1, 2019, 18:50 [IST] தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முக்கிய கேரக்டரிலும் சில படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபு தற்போது சுமார் பத்து படங்களில் காமெடி நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு நடித்த நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன. அக்டோபர் 27ம் தேதி தீபாவளிப் பண்டிகை வர உள்ள நிலையில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 படங்கள் வரை ரிலீஸாக உள்ளன. வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளிவரும் ‘பட்லர் பாபு’, சுந்தர் சி-யின் ’இருட்டு’, வருண் நடித்த ’பப்பி’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார். அக்டோபர் 11ல் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’படமும் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’,த்ரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’,’அருவம்’, சமுத்திரக் கனியின் ‘அடுத்த சாட்டை’ ஆகிய படங்கள் தங்கள் அக்டோபர் வருகையை உறுதி செய்திருக்கின்றன. தீபாவளிக்கு இப்போதைக்கு விஜய்யின் பிகிலும் கார்த்தியின் கைதியும் ரிலீஸை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|