தாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 31, 2019, 11:55 [IST]

சென்னை: பண மோசடி செய்த வழக்கில் தனது தாயார் கைது செய்யப்பட்டது அறிந்து, கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் கவின். அவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் கவினுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆனார் கவின். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 60 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக பயணித்து வருகிறார். வீட்டிற்குள் இருக்கும் அவர் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், வீட்டிற்கு வெளியில் அவரது குடும்பமும் ஒரு பிரச்னையை சந்தித்துள்ளது.

சீட்டு கம்பெனி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கவினின் தாயாருக்கும், அவரது உறவினர்கள் இருவருக்கும் கடந்த வியாழன் அன்று ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் கவின். இவர் தாய் ராஜலட்சுமி உட்பட சொர்நாதன், அருணகிரிநாதன், தமையேந்தி, ராணி என்று ஐந்து பேர் சேர்ந்து திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஏலச்சீட்டு நடத்திய இவர்கள் 2007-ஆம் ஆண்டு, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பத்தராமல் தலைமறைவானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின் இந்த பண மோசடியில் பாதிக்கப்பட்ட 29 பேரும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். அப்படி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரனை நடத்தப்பட்டதுள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற விசாரனையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 31 சாட்சிகளிடம் நீதிபதி விசாரனை நடத்தியுள்ளார். 31 பேருமே இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்ன காரணத்தினால், நீதிபதி இந்த ஐந்து பேரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.

மேலும், இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் பணமும், 2007 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, அந்த 1 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வட்டியுடன், மொத்தம் 55.10 லட்சம் ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும், அப்படி செலுத்த தவறினால் இவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக வெளியில் நடக்கும் விசயங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தெரிவிக்கக் கூடாது என்ற விதி உள்ளது. இருப்பினும், கவினிடம் அவரது தாயார் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டு, வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021