இந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 21, 2019, 07:25 [IST] கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். ரத்னவேலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் விவேக் இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமல்ஹாசனுடன் விவேக் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, கே.பாலசந்தர் இயக்கிய 'பார்த்தாலே பரவசம்' படத்தில் விவேக் ஒரு முக்கிய கேரக்டரிலும் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தபோதிலும் இருவரும் இணைந்த காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’ மற்றும் ‘சிவாஜி’ ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|