‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 18, 2019, 05:55 [IST] இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'அசுரன்'. வரும் அக்டோபர் 3-ம் தேதி வெளியாகிறது. முதல் இரண்டு ஷெட்யூல்களும் கோவில்பட்டியில் நடந்துமுடிந்த நிலையில், படத்தின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட ஷூட்டிங், தற்போது சென்னையில் நடந்துவருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் தனுஷின் மகனாக கருணாஸின் மகன் நடிக்கிறார். இந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மகன் தனுஷுக்கு ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் அம்முவாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர் அபிராமி. இதனாலேயே அவரது பெயர் ‘அம்மு’ அபிராமி என மாறியது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக ‘அசுரன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|