சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 21, 2019, 07:20 [IST] சிவகார்த்திகேயனின் 15வது படத்தை 'இரும்புத்திரை' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானஇயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் நிறுவனம் மற்றும் 'விஸ்வாசம்' படத்தை விநியோகம் செய்த கே .ஜே. ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவந்த வேளையில், புதுமுக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்த 'ஹலோ' படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளாவார். இயக்குநர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் 2014-ல் விவகாரத்து பெற்றார்கள். லிஸி கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் அறிமுகமானவர். புதுமுகம் கார்த்திக், துல்கர் சல்மானை வைத்து இயக்கும் வான் படத்திலும் நடிக்கிறார் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|