நடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 19, 2019, 08:50 [IST] தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி நடிகர் அருண்பாண்டியன். ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தற்போது அருண்பாண்டியன் வெளிநாடுகளில் படத்தை வெளியீடு செய்யும் விநியோகஸ்தராக உள்ளார். அருண்பாண்டியனுக்கு மூன்று மகள்கள். கடைசி மகள் கீர்த்தி பாண்டியன். இவர் நாடக நடிகை ஆவார். கடந்த 3 வருடமாக தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து வந்தார். இதுவரை சுமார் 20 நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கனா படத்தில் நடித்துள்ள தர்ஷனுக்கு ஜோடியாக புதிய படத்தில் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹரிஷ் ராம் இயக்குகிறார். கதாநாயகியானது குறித்து கீர்த்தி பாண்டியன் கூறியதாவது: “நான் ஏற்கனவே மேடை நாடகங்களில் நடித்துள்ளதால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதற்காக நிறைய கதைகள் கேட்டு வந்தேன். ஆனாலும் கதைகள் நான் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஹரிஷ் சொன்ன கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பார்க்கும் படமாக இது இருக்கும். நான் சினிமாவில் நடிக்க தந்தை சம்மதம் தெரிவித்து உள்ளார். உனது வழியை நீயே தேடிக்கொள் என்று அவர் கூறியிருக்கிறார். சினிமா என்பது கவர்ச்சி உலகம். இதில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து திறமையான நடிகை என்று பெயர் வாங்குவதே எனது விருப்பமாக உள்ளது.” என்று கீர்த்தி பாண்டியன் கூறினார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|