ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 14, 2018, 13:05 [IST] சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘பேட்ட’. ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது பேட்ட படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன், சசிகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து எப்போது படம் வெளியீடு என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு பேட்ட படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|