எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 02, 2018, 16:45 [IST] கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய நடித்துள்ள சர்கார் படம் தொடர்பான கதை திருட்டு பிரச்னையில் எழுத்தாளர் சங்க தலைவராக திறம்பட செயல்பட்டு செங்கோல் பட கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தார். இந்நிலையில் பாக்யராஜ், திடீரென எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் நானும் மகிழ்ச்சியாக பொறுப்பு ஏற்று, மனசாட்சியோடு, நேர்மையாக செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக சென்றது. சர்கார் பட விவகாரத்தில் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. எனக்கு நேர்ந்துள்ள அசௌகரியங்கள் மற்றும் ஒழுங்கீனங்களை நான் சங்கத்தின் நலன் கருதி வெளியே சொல்லவில்லை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்துக்கு போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இத்தனை அசௌகரியங்கள் தான் சந்திக்க நேர்ந்தது. சங்கம் தற்போது உள்ள நிலையில் தேர்தல் வேண்டுமா..? என பலரும் கேட்கலாம். ஆனால் சங்கம் சீர்கெட்டுப் போவதை விட முறையாக தேர்தலை சந்திப்பது நலம் பயக்கும் என்று திரையுலகின் நன்மை கருதி இதை கூறுகிறேன்.மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட்டு முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று பொறுப்பை ஏற்று, தொடர்ந்து கடமை உடன் செயல்படுவேன். சர்கார் விவகாரத்தில் முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படாததால் வேறு வழியில்லாமல் சர்கார் பட கதையை வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் மன்னிப்பு கோருகிறேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார். பாக்கியராஜின் பதவி விலகலை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பாக்யராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவரது பதவி விலகலை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பாக்யராஜே தலைவராகத் தொடரவேண்டும் என அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ள அவர், பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|