விஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 10, 2018, 12:55 [IST] சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளிவருமென படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|