பணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 09, 2018, 21:10 [IST] கடந்த 2013ம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத் தயாரிப்பு நிறுவனம், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து 'அரசன்' படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியது. ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தாக அவர் மீது குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிம்பு பணத்தை திருப்பி தர உத்தரவாதம் அளிக்கவேண்டும். இல்லையேல் சிம்புவின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, நான்கு வார காலம் அவகாசம் அளித்தது. ஆனால் உத்தரவுப்படி சிம்பு எதுவும் செய்யவில்லை. இன்று (09-10-2018) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பேஷன் மூவி நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.85 லட்சம் பணத்தை திருப்பித் தர சிம்பு உத்தரவாதம் அளிக்கவேண்டும். இல்லையேல் அவரது சொத்துகள் ஜப்பி செய்யப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி செக்கச் சிவந்த வானம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு சுந்தர்.சி படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|