சர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 07, 2018, 07:50 [IST] காளி படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் திமிரு புடிச்சவன். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்ராஜ் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கணேசா இயக்கத்தில் உருவாகி இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அதையடுத்து படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று திமிரு புடிச்சவன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய் நடிப்பு உருவாகி வரும் சர்கார் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படமும், சூர்யா செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் `என்ஜிகே' படமும் தீபாவளி அன்று வெளியாவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|