காட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 04, 2018, 21:25 [IST] இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே. இப்படத்தில் கதாநாயகன் வைபவுக்கு ஜோடியாக சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு நாயகிகள். இதில் சற்று சுயநலமிக்க கேரக்டரில் சோனம் பஜ்வா நடிக்கிறார். மன நல மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் கதையில் இடம்பெறும் 1960 சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார்கள். குழந்தைகளைக் கவரும் வகையில் ரத்தம் குடிக்காத காட்டேரியாக காமெடி கலந்த காட்டேரியாக இப்படம் உருவாகி வருகிறது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|