விஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 09, 2018, 17:15 [IST] நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விஸ்வரூபம் 2 படம் இம்மாதம் 10 தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்தது. 2008-ம் ஆண்டு மர்மயோகி படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கமல்ஹாசனுக்கு ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என புதிய மனுவை சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்தது. கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து நாளை (ஆகஸ்டு 10) அன்று கமலின் விஸ்வரூபம் 2 வெளியாவதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|