விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 08, 2018, 06:30 [IST] நடிகர் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படங்களுக்கு நெகட்டிவான தலைப்புகளை வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அவரின் முந்தைய படங்களான, சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்ற வரிசையில் தற்போது அவர் நடிக்க இருக்கும் புது படத்தின் தலைப்பு கொலைகாரன் என வைக்கப்பட்டுள்ளது. கொலைகாரன் படத்தை தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிக்கிறார். ஆண்ட்ரு லூயிஸ் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ஆஷிமா நார்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாசர், சீதா, வி.டி.வி.கனேஷ் உள்ளிட்டவர்களும் படத்தில் நடிக்கிறார்கள். இரும்புத்திரை படத்தில் நடித்தது போல் இந்தப் படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்து அவர் திமிரு பிடிச்சன் படத்தில் நடித்து வருகிறார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|