பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 30, 2018, 09:20 [IST] தமிழ் திரையுலகின் முதுபெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் அக்டோபர் 31, 1929-ல் பிறந்தார். தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டவர். முக்தா சீனிவாசன் 1958-ம் ஆண்டு, 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றார். சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேஷ், ஜெயசங்கர், போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். ஜெயலலிதாவின் 100 வது படமான சூரியகாந்தி உட்பட 65 திரைப்படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். முதலாளி திரைப்படத்திற்காக தேசிய விருது, பலப்பரிட்சை - தமிழக அரசின் 1977-78க்கான சிறந்த திரைப்பட விருது, 1981-82 கீழ் வானம் சிவக்கும்' - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட விருது, பரிட்சைக்கு நேரமாச்சு - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட இயக்குநர் விருது ஆகியவற்றை பெற்றவர் ஆவார். முக்தா சீனிவாசன், திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும், நூல்களையும், ஆங்கிலத்திலும், தமிழிலும், எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும், ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். பின்னர் மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தென் சென்னை பகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்தார். அரசியல், திரைப்படத்துறை, பதிப்புத்துறை என பன்முகத்தன்மை கொண்ட இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|