அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 19, 2018, 11:00 [IST] ஜி.வி. பிரகாஷ் குமார் அறிமுகமான ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன், இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘100’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். அதர்வாவும், ஹன்சிகாவும் முதன் முதலாக ஜோடியாக நடிக்கும் படம் இது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ‘எரும சாணி’ புகழ் ஹரிராஜாவும், யோகி பாபுவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம் ஆண்டனின் 3வது படம் இது. தனது முதல் படமான டார்லிங் படத்தை அடுத்து அவர் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|