சந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 19, 2018, 10:35 [IST] அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில், ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படம் வருகிற ஜூலை 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளியான படம் ‘சக்க போடு போடு ராஜா’. இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|