இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 12:25 [IST] கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குநர் சந்தோஷ் ஜெய்குமார் இயக்கிய அடல்ட் காமெடி படமான ‘ஹர ஹர மகாதேவகி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து இயக்குநர் சந்தோஷ் ஜெய்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த திரைப்படம் தமிழ் திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு முன்பே வெளியிட தயார் நிலையில் இருந்தது. இப்போது திரையுலகினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து. இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மே மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் மே 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இந்த படம் மே 4ல் ரிலீஸ் ஆகும் என்று உறுதிபட கூறியுள்ளனர். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு பணி செய்துள்ளார்.
|
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021) பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985) தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983) நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983) ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983) அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983) வா வா என் வீணையே - சட்டம் (1983) தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982) பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982) தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982) என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982) ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982) ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979) மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979) ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964) உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978) ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979) கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021) கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978) அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) |
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|